முதல் நாள் பள்ளியில் — First Day at School

LangFastPro Editorial Team's avatar
Lesson prepared byLangFastPro Editorial Team
More

கதைகள் மூலம் தமிழ் கற்போம்.


Section 1: Tamil Story

முதல் நாள் பள்ளியில் — First Day at School

A girl at her school entrance, with her mother and teacher smiling nearby.

Listen to the story0:00 / 0:00

நான் பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் இன்று. அம்மா என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்.

“அம்மா! நான் பெரியவளாக வளர்ந்து விட்டேன். என் கையை விடுங்கள்!” என்று சொன்னேன். அம்மா என் கையை இறுக்கிப் பிடித்தார்.

பள்ளியின் அருகில் நிறைய குழந்தைகள் இருந்தனர்.

சிலர் பேருந்தில் வந்தனர். சிலர் காரில் வந்தனர். சிலர் மிதிவண்டியில் வந்தனர். சிலர் என்னைப் போல் நடந்தும் வந்தனர்.

பள்ளியின் வாசலை அடைந்தோம். அம்மா என் கையை விட்டார். அவர் வாசலிலேயே நின்றார். நான் இப்போது தனியாக உள்ளே சென்றேன். அங்கு என்னைச் சுற்றி நிறைய புது முகங்கள் இருந்தன.

முதல் அடி வைத்தேன். அடுத்த அடி வைத்தேன். திரும்பி அம்மாவைப் பார்த்தேன். நான் நடக்க நடக்க அம்மா சிறியதானார். நான் இப்படி நடந்து கொண்டே இருந்தால் அம்மா மறைந்து விடுவாரோ?

நான் அம்மாவிடம் திரும்பி ஓடினேன். இப்போது நான் அவ்வளவு பெரியவளாக உணரவில்லை. அம்மாவின் கையைப் பிடித்தேன். “போய்விடாதீர்கள்!” என்றேன்.

எல்லோரும் பள்ளியின் உள்ளே சென்றனர். நான் மட்டும் வெளியில் இருந்தேன். ஆசிரியை வெளியே வந்தார். என்னைப் பார்த்து சிரித்தார். நானும் சிரித்தேன்.

அம்மா சொன்னார், “ராணி, நீ பள்ளி முடிந்து வெளியே வரும்போது நான் இங்கே இருப்பேன்."

நான் அம்மாவின் கையை விட்டேன். என்னைப் பார்த்து அம்மா கையசைத்தார்.

நான் பள்ளியின் உள்ளே ஓடினேன். பள்ளி முடிந்ததும் என் அம்மா வெளியே நின்று கொண்டிருப்பார்.


Section 2: Sentence-by-Sentence Translation

#TamilEnglish
1நான் பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் இன்று.Today is my first day at school.
2அம்மா என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்.Mother walked along holding my hand.
3“அம்மா! நான் பெரியவளாக வளர்ந்து விட்டேன். என் கையை விடுங்கள்!” என்று சொன்னேன்.“Mother! I have grown big. Let go of my hand!” I said.
4அம்மா என் கையை இறுக்கிப் பிடித்தார்.Mother held my hand tightly.
5பள்ளியின் அருகில் நிறைய குழந்தைகள் இருந்தனர்.There were lots of children near the school.
6சிலர் பேருந்தில் வந்தனர்.Some came by bus.
7சிலர் காரில் வந்தனர்.Some came by car.
8சிலர் மிதிவண்டியில் வந்தனர்.Some came by bicycle.
9சிலர் என்னைப் போல் நடந்தும் வந்தனர்.Some came on foot, like me.
10பள்ளியின் வாசலை அடைந்தோம்.We reached the school entrance.
11அம்மா என் கையை விட்டார்.Mother let go of my hand.
12அவர் வாசலிலேயே நின்றார்.She stayed right at the entrance.
13நான் இப்போது தனியாக உள்ளே சென்றேன்.Now I went inside on my own.
14அங்கு என்னைச் சுற்றி நிறைய புது முகங்கள் இருந்தன.There were lots of new faces around me.
15முதல் அடி வைத்தேன்.I took one step.
16அடுத்த அடி வைத்தேன்.I took the next step.
17திரும்பி அம்மாவைப் பார்த்தேன்.I turned and looked at Mother.
18நான் நடக்க நடக்க அம்மா சிறியதானார்.As I kept walking, Mother grew smaller.
19நான் இப்படி நடந்து கொண்டே இருந்தால் அம்மா மறைந்து விடுவாரோ?If I kept walking like this, would Mother disappear?
20நான் அம்மாவிடம் திரும்பி ஓடினேன்.I ran back to Mother.
21இப்போது நான் அவ்வளவு பெரியவளாக உணரவில்லை.Now I did not feel so big.
22அம்மாவின் கையைப் பிடித்தேன்.I held Mother’s hand.
23“போய்விடாதீர்கள்!” என்றேன்.“Don’t go away!” I said.
24எல்லோரும் பள்ளியின் உள்ளே சென்றனர்.Everyone went inside the school.
25நான் மட்டும் வெளியில் இருந்தேன்.Only I remained outside.
26ஆசிரியை வெளியே வந்தார்.The teacher came outside.
27என்னைப் பார்த்து சிரித்தார்.She looked at me and smiled.
28நானும் சிரித்தேன்.I smiled too.
29அம்மா சொன்னார், “ராணி, நீ பள்ளி முடிந்து வெளியே வரும்போது நான் இங்கே இருப்பேன்."Mother said, “Rani, I will be here when you come out after school.”
30நான் அம்மாவின் கையை விட்டேன்.I let go of Mother’s hand.
31என்னைப் பார்த்து அம்மா கையசைத்தார்.Mother waved to me.
32நான் பள்ளியின் உள்ளே ஓடினேன்.I ran inside the school.
33பள்ளி முடிந்ததும் என் அம்மா வெளியே நின்று கொண்டிருப்பார்.When school is over, my mother will be waiting outside.

Section 3: Vocabulary

சில சொற்கள் அடிப்படை வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. / Some entries use base forms rather than the inflected forms in the story.

Roman spellings are simple reading aids. Hold aa, ee and oo longer; ay and oh stand for steady long e and o sounds. Some Tamil sound distinctions share a simple spelling here.

TamilPronunciationPart of speechMeaning
பள்ளிpallinounschool
முதல்mudhaladjectivefirst
நாள்naalnounday
அம்மாammaanounmother
கைkainounhand
அருகில்arugilpostpositionnear
குழந்தைkuzhandhainounchild
பேருந்துpayrundhunounbus
மிதிவண்டிmidhivandinounbicycle
வாசல்vaasalnounentrance; doorway
தனியாகthaniyaagaadverbalone
உள்ளேullayadverbinside
முகம்mugamnounface
அடிadinounstep
திரும்பிthirumbiverb formturning; back
அடுத்தaduththaadjectivenext
வெளியில்veliyiladverboutside
ஆசிரியைaasiriyainounfemale teacher
இங்கேingayadverbhere
எல்லோரும்ellohrumpronouneveryone

Continue your language learning journey with these related lessons:

Source: முதல் நாள் பள்ளியில். Story by Cheryl Rao (© Pratham Books, 2015); Tamil translation © Uma Maheswari, 2015; the source edition also credits Lakshmi as a translator. Originally published as Rani’s First Day at School on StoryWeaver. CC BY 4.0. Tamil text retained; new English translation, learning notes and original illustration by LangFastPro. Source illustrations are not reproduced.

Related lessons