கதைகள் மூலம் தமிழ் கற்போம்.
Section 1: Tamil Story
நிலாவும் தொப்பியும் — The Moon and the Cap

நாங்கள் எல்லோரும் தசரா திருவிழா கண்காட்சிக்குச் சென்றோம்.
அப்பா சிண்டுவுக்கு ஒரு அழகான கண்ணாடி வாங்கிக் கொடுத்தார்.அம்மா எனக்கு ஒரு நீல நிறத் தொப்பி வாங்கிக் கொடுத்தார்.சின்னப் பாப்பாவுக்கு இனிப்பு மிட்டாய் கிடைத்தது.
திரும்பி வீட்டுக்குப் போகும் வழியில் பலமாக காற்று வீசியது. அதில் என் தொப்பி பறந்து போனது.
ஒரு பழைய அரச மரத்தின் கிளையில் போய் என் தொப்பி மாட்டிக் கொண்டது.
நான் “ஓ…!” என்று அழுதேன். இரவு உணவையும் நான் சாப்பிடவில்லை.
இரவு வானில் நிலா தவழ்ந்து வந்தது. அது அரச மரத்தில் இருந்த என் தொப்பியைப் பார்த்தது.
அது என் தொப்பியை அணிந்து பார்த்தது. மகிழ்ச்சியோடு சிரித்தது. நானும் சிரித்தேன்.
அடுத்த நாள் பள்ளியில் இருந்து வந்ததும், என் அம்மா பளபளக்கும் புதிய சிவப்புத் தொப்பி ஒன்றைக் கொடுத்தார். “நிலா அனுப்பியது” என்றும் சொன்னார்.
அன்று இரவு நானும் நிலாவும் புன்னகை செய்தோம். அவரவர் தொப்பியை அணிந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தோம்.
சூரியனுக்கும் ஒரு தொப்பி வேண்டுமா? என்ன சொல்கிறீர்கள்?
நான் இன்று என்ன தொப்பி அணிந்துள்ளேன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்!
Section 2: Sentence-by-Sentence Translation
| # | Tamil (தமிழ்) | English Translation |
|---|---|---|
| 1 | நாங்கள் எல்லோரும் தசரா திருவிழா கண்காட்சிக்குச் சென்றோம். | We all went to the Dussehra festival fair. |
| 2 | அப்பா சிண்டுவுக்கு ஒரு அழகான கண்ணாடி வாங்கிக் கொடுத்தார். | Father bought Chintu a lovely pair of glasses. |
| 3 | அம்மா எனக்கு ஒரு நீல நிறத் தொப்பி வாங்கிக் கொடுத்தார். | Mother bought me a blue cap. |
| 4 | சின்னப் பாப்பாவுக்கு இனிப்பு மிட்டாய் கிடைத்தது. | The little baby got some sweet candy. |
| 5 | திரும்பி வீட்டுக்குப் போகும் வழியில் பலமாக காற்று வீசியது. | On our way back home, a strong wind blew. |
| 6 | அதில் என் தொப்பி பறந்து போனது. | My cap flew away in it. |
| 7 | ஒரு பழைய அரச மரத்தின் கிளையில் போய் என் தொப்பி மாட்டிக் கொண்டது. | My cap got caught on a branch of an old peepal tree. |
| 8 | நான் “ஓ…!” என்று அழுதேன். | I cried, “Oh…!” |
| 9 | இரவு உணவையும் நான் சாப்பிடவில்லை. | I did not even eat dinner. |
| 10 | இரவு வானில் நிலா தவழ்ந்து வந்தது. | The moon crept into the night sky. |
| 11 | அது அரச மரத்தில் இருந்த என் தொப்பியைப் பார்த்தது. | It saw my cap in the peepal tree. |
| 12 | அது என் தொப்பியை அணிந்து பார்த்தது. | It tried on my cap. |
| 13 | மகிழ்ச்சியோடு சிரித்தது. | It smiled happily. |
| 14 | நானும் சிரித்தேன். | I smiled too. |
| 15 | அடுத்த நாள் பள்ளியில் இருந்து வந்ததும், என் அம்மா பளபளக்கும் புதிய சிவப்புத் தொப்பி ஒன்றைக் கொடுத்தார். | When I came home from school the next day, Mother gave me a shiny new red cap. |
| 16 | “நிலா அனுப்பியது” என்றும் சொன்னார். | She also said, “The moon sent it.” |
| 17 | அன்று இரவு நானும் நிலாவும் புன்னகை செய்தோம். | That night, the moon and I smiled. |
| 18 | அவரவர் தொப்பியை அணிந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தோம். | We were happy, each wearing our own cap. |
| 19 | சூரியனுக்கும் ஒரு தொப்பி வேண்டுமா? | Does the sun need a cap too? |
| 20 | என்ன சொல்கிறீர்கள்? | What do you think? |
| 21 | நான் இன்று என்ன தொப்பி அணிந்துள்ளேன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்! | Now tell me what cap I am wearing today! |
Section 3: Vocabulary
சில சொற்கள் அடிப்படை வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. / Some entries use base forms rather than the inflected forms in the story.
| Tamil | Transliteration | Part of Speech | English Meaning |
|---|---|---|---|
| நிலா | nilaa | Noun | moon |
| தொப்பி | thoppi | Noun | cap; hat |
| திருவிழா | thiruvizhaa | Noun | festival |
| கண்காட்சி | kankaatchi | Noun | exhibition; fair |
| கண்ணாடி | kannaadi | Noun | glasses, here; also mirror |
| நீல | neela | Adjective | blue |
| நிறம் | niram | Noun | colour |
| மிட்டாய் | mittaay | Noun | candy; sweet |
| வீடு | veedu | Noun | house; home |
| வழி | vazhi | Noun | way; path |
| காற்று | kaatru | Noun | wind |
| அரச மரம் | arasa maram | Noun phrase | peepal tree |
| கிளை | kilai | Noun | branch |
| இரவு | iravu | Noun | night |
| உணவு | unavu | Noun | food; meal |
| வானம் | vaanam | Noun | sky |
| பள்ளி | palli | Noun | school |
| புதிய | pudhiya | Adjective | new |
| சிவப்பு | sivappu | Noun / adjective | red |
| புன்னகை | punnagai | Noun | smile |
| சூரியன் | sooriyan | Noun | sun |
| இன்று | indru | Adverb | today |
-உம்: நிலாவும் தொப்பியும் என்ற தலைப்பில் இது இரண்டு பெயர்களை இணைக்கிறது. / In the title, -um joins the two nouns: “the moon and the cap.”
Roman spellings are reading aids: aa, ee and oo mark long vowels; ay represents ஏ and oh represents ஓ. Keep these vowel sounds steady. The th spelling represents the dental Tamil t, not the English sound in “thin”; zh represents ழ. Different Tamil n, l and r letters can share a simple Roman spelling.
Explore another language with this related lesson:
Source: நிலாவும் தொப்பியும் by Rohini Nilekani; Tamil translation by S. Jayaraman (© Pratham Books, 2007), published by Pratham Books; Tamil text on Libbify, from the English story The Moon and The Cap, CC BY 4.0. Source Tamil retained; new English translation and learning notes by LangFastPro.




