கதைகள் மூலம் தமிழ் கற்போம்.
Section 1: Tamil Story
சுசீலாவின் கோலங்கள் — Susheela’s Kolams

சுசீலா தமிழ்நாட்டில் வசிக்கிறாள். அவள் தன் அம்மாவிடம் இருந்து கோலம் போடக் கற்றுக் கொண்டாள்.
சுசீலாவுக்கு, ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் ஒரே ஒரு கோலம் போட அனுமதி உண்டு.
கோலம் போடுவது என்றால் சுசீலாவுக்கு மிகவும் பிடிக்கும்! அவள் தரையிலும் படிகளிலும் சுவர்களிலும் கோலம் போடுவாள்.
ரயில்களிலும் உயரமான கட்டிடங்களிலும்…
...வானத்தில் பறக்கும் பட்டங்கள் மீதும்தான்! அனைவரும் சுசீலாவின் கோலங்களைக் கண்டு ரசித்தனர்!
ஒரு நாள், விமானப் படையினர் ஒரு கோலம் உருவாக்க உதவும்படி சுசீலாவிடம் கேட்டனர்! விமானங்களை எப்படித் திருப்ப வேண்டும், இறங்கவும் ஏறவும் வேண்டும் என சுசீலா சொன்னாள்...
...சிறிது நேரம் கழித்து வானத்தில் ஒரு பெரிய, அழகான, வண்ணமயமான கோலம் தோன்றியது! நகரத்தில் உள்ள எல்லோரும் பார்க்கும்படி!
அன்று இரவு, சுசீலா தனது மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பார்த்தாள். நட்சத்திரங்கள் அவளைப் பார்த்து மின்னின. சுசீலா அடுத்து எங்கே கோலம் போடுவாள் என்று நினைக்கிறீர்கள்?
Section 2: Sentence-by-Sentence Translation
| # | Tamil (தமிழ்) | English Translation |
|---|---|---|
| 1 | சுசீலா தமிழ்நாட்டில் வசிக்கிறாள். | Susheela lives in Tamil Nadu. |
| 2 | அவள் தன் அம்மாவிடம் இருந்து கோலம் போடக் கற்றுக் கொண்டாள். | She learned to draw kolams from her mother. |
| 3 | சுசீலாவுக்கு, ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் ஒரே ஒரு கோலம் போட அனுமதி உண்டு. | Every Pongal day, Susheela is allowed to draw just one kolam. |
| 4 | கோலம் போடுவது என்றால் சுசீலாவுக்கு மிகவும் பிடிக்கும்! | Susheela loves drawing kolams! |
| 5 | அவள் தரையிலும் படிகளிலும் சுவர்களிலும் கோலம் போடுவாள். | She draws them on the floor, the steps and the walls. |
| 6 | ரயில்களிலும் உயரமான கட்டிடங்களிலும்… | On trains and tall buildings… |
| 7 | ...வானத்தில் பறக்கும் பட்டங்கள் மீதும்தான்! | ...and even on kites flying in the sky! |
| 8 | அனைவரும் சுசீலாவின் கோலங்களைக் கண்டு ரசித்தனர்! | Everyone admired Susheela’s kolams! |
| 9 | ஒரு நாள், விமானப் படையினர் ஒரு கோலம் உருவாக்க உதவும்படி சுசீலாவிடம் கேட்டனர்! | One day, the air force asked Susheela to help create a kolam! |
| 10 | விமானங்களை எப்படித் திருப்ப வேண்டும், இறங்கவும் ஏறவும் வேண்டும் என சுசீலா சொன்னாள்... | Susheela told them how to turn the planes, descend and climb... |
| 11 | ...சிறிது நேரம் கழித்து வானத்தில் ஒரு பெரிய, அழகான, வண்ணமயமான கோலம் தோன்றியது! | ...a little later, a large, beautiful, colourful kolam appeared in the sky! |
| 12 | நகரத்தில் உள்ள எல்லோரும் பார்க்கும்படி! | For everyone in the city to see! |
| 13 | அன்று இரவு, சுசீலா தனது மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பார்த்தாள். | That night, Susheela stood on her rooftop and looked at the sky. |
| 14 | நட்சத்திரங்கள் அவளைப் பார்த்து மின்னின. | The stars twinkled at her. |
| 15 | சுசீலா அடுத்து எங்கே கோலம் போடுவாள் என்று நினைக்கிறீர்கள்? | Where do you think Susheela will draw her next kolam? |
Section 3: Vocabulary
சில சொற்கள் அடிப்படை வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. / Some entries use base forms rather than the inflected forms in the story.
| Tamil | Transliteration | Part of Speech | English Meaning |
|---|---|---|---|
| கோலம் | kohlam | Noun | decorative pattern, often drawn on the ground |
| அம்மா | ammaa | Noun | mother |
| பொங்கல் | pongal | Noun | Pongal, the Tamil harvest festival |
| அனுமதி | anumadhi | Noun | permission |
| தரை | tharai | Noun | floor; ground |
| படி | padi | Noun | step |
| சுவர் | suvar | Noun | wall |
| ரயில் | rayil | Noun | train |
| உயரமான | uyaramaana | Adjective | tall |
| கட்டிடம் | kattidam | Noun | building |
| வானம் | vaanam | Noun | sky |
| பட்டம் | pattam | Noun | kite |
| விமானப் படை | vimaanap padai | Noun phrase | air force |
| விமானம் | vimaanam | Noun | aeroplane |
| நேரம் | nayram | Noun | time |
| பெரிய | periya | Adjective | big |
| அழகான | azhagaana | Adjective | beautiful |
| வண்ணமயமான | vannamayamaana | Adjective | colourful |
| நகரம் | nagaram | Noun | city |
| இரவு | iravu | Noun | night |
| மொட்டை மாடி | mottai maadi | Noun phrase | open, flat rooftop |
| நட்சத்திரம் | natchaththiram | Noun | star |
கோலம் / கோலங்கள்: ஒன்று என்றால் கோலம்; பல என்றால் கோலங்கள். / Kohlam is singular; kohlangal is plural.
Roman spellings are reading aids: aa, ee and oo mark long vowels; ay represents ஏ and oh represents ஓ. Keep these vowel sounds steady. The th spelling represents the dental Tamil t, not the English sound in “thin”; zh represents ழ. Different Tamil n, l and r letters can share a simple Roman spelling.
Explore another language with this related lesson:
Source: சுசீலாவின் கோலங்கள் by Sridala Swami; Tamil translation by Praba Ram and Sheela Preuitt (© Pratham Books, 2012), published by Pratham Books; Tamil text on Libbify, from the English story Susheela's Kolams, CC BY 4.0. Source Tamil retained; new English translation and learning notes by LangFastPro.




