அகாயின் சிறப்பு பாய் — Akai’s Special Mat (Excerpt)

LangFastPro Editorial Team's avatar
Lesson prepared byLangFastPro Editorial Team
More

கதைகள் மூலம் தமிழ் கற்கலாம்.

Section 1: Tamil Story

அகாயின் சிறப்பு பாய் — Akai’s Special Mat (Excerpt)

Akai returns to her family as a little blue bird flies overhead.

Listen to the story0:00 / 0:00

அகாய் மெதுவாக கண்களைத் திறந்தாள். அவள் நிமிர்ந்து பார்த்தபோது, மேலே ஒரு கிளையில் ஒரு சிறிய நீல பறவையைக் கண்டாள்.

அகாய் எழுந்ததும், சிறிய நீலப் பறவை சிறகுகளை விரித்து, அகாயை வழி நடத்தியது. அவள் பறவையைப் பின்தொடர்ந்தாள்.

அகாய் சென்ற பாதையில் இரண்டு திசைகளில் பிரிந்த இடம் ஒன்று வந்தது. நீலப்பறவை அகாயின் பாய் போன்ற ஒரு துண்டை கீழே போட்டது.

பாயின் துண்டை எடுத்த அகாய் தன் தாயின் கால்தடங்களைக் கண்டாள். விரைவில் அவர்கள் தண்ணீர் எடுத்து வரும் ஆழமற்ற கிணற்றைப் பார்த்தாள்.

அகாயின் குடும்பத்தினர் பாடி, நடனமாடி அவளை வரவேற்றனர். அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து, இறைச்சியை வறுத்து, தங்கள் குழந்தை பாதுகாப்பாக திரும்பியதைக் கொண்டாடினர்.

Section 2: Sentence-by-Sentence Translation

#TamilEnglish
1அகாய் மெதுவாக கண்களைத் திறந்தாள்.Akai slowly opened her eyes.
2அவள் நிமிர்ந்து பார்த்தபோது, மேலே ஒரு கிளையில் ஒரு சிறிய நீல பறவையைக் கண்டாள்.When she looked up, she saw a small blue bird on a branch above her.
3அகாய் எழுந்ததும், சிறிய நீலப் பறவை சிறகுகளை விரித்து, அகாயை வழி நடத்தியது.When Akai got up, the small blue bird spread its wings and showed her the way.
4அவள் பறவையைப் பின்தொடர்ந்தாள்.She followed the bird.
5அகாய் சென்ற பாதையில் இரண்டு திசைகளில் பிரிந்த இடம் ஒன்று வந்தது.Akai came to a place where the path split in two directions.
6நீலப்பறவை அகாயின் பாய் போன்ற ஒரு துண்டை கீழே போட்டது.The blue bird dropped a piece that looked like Akai’s mat.
7பாயின் துண்டை எடுத்த அகாய் தன் தாயின் கால்தடங்களைக் கண்டாள்.Akai picked up the piece of mat and saw her mother’s footprints.
8விரைவில் அவர்கள் தண்ணீர் எடுத்து வரும் ஆழமற்ற கிணற்றைப் பார்த்தாள்.Soon she saw the shallow well where they fetched water.
9அகாயின் குடும்பத்தினர் பாடி, நடனமாடி அவளை வரவேற்றனர்.Akai’s family welcomed her with singing and dancing.
10அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து, இறைச்சியை வறுத்து, தங்கள் குழந்தை பாதுகாப்பாக திரும்பியதைக் கொண்டாடினர்.They slaughtered a goat, roasted the meat and celebrated their child’s safe return.

Section 3: Vocabulary

TamilEnglish lettersPart of speechEnglish
மெதுவாகmethuvaagaAdverbslowly
நிமிர்ந்துnimirnthuVerb formstraightening up; raising one’s head
கிளையில்kilaiyilNoun (locative)on a branch
பறவைparavaiNounbird
சிறகுகளைsiragugalaiNoun (accusative plural)wings
விரித்துviriththuVerb formspreading out; opening out
வழி நடத்தியதுvazhi nadaththiyathuVerb phraseshowed the way; guided
பின்தொடர்ந்தாள்pinthodarnthaalVerbshe followed
பாதையில்paathaiyilNoun (locative)on the path
திசைகளில்thisaigalilNoun (locative plural)in directions
பிரிந்தpirinthaVerb formthat split or branched off
துண்டைthundaiNoun (accusative)a piece
கீழேkeezheAdverbdown; below
கால்தடங்களைக்kaalthadangalaikNoun (accusative plural)footprints
விரைவில்viraivilAdverbsoon
ஆழமற்றaazhamatraAdjectiveshallow
கிணற்றைப்kinatraipNoun (accusative)the well
வரவேற்றனர்varavetranarVerbthey welcomed
பாதுகாப்பாகpaathugaappaagaAdverbsafely
கொண்டாடினர்kondaadinarVerbthey celebrated

Source: அகாயின் சிறப்பு பாய் (Akai’s Special Mat), pp. 11–15. Written by Ursula Nafula, © African Storybook Initiative 2014; Tamil translation by Sarvesh Thirumalai, © Eethal Foundation 2025. Original and Tamil translation are licensed CC BY 4.0. This excerpt preserves the Tamil wording; LangFastPro added the English translation, reading aid, vocabulary and new illustration. The source illustrations by Catherine Groenewald are not reproduced.

Related lessons