யாப்போ அந்த நாளை காப்பாற்றினான் — Yapo Saves the Day

LangFastPro Editorial Team's avatar
Lesson prepared byLangFastPro Editorial Team
More

கால்பந்து விளையாட்டில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அறிய இந்தக் கதையைப் படியுங்கள்.

Section 1: Tamil Story

யாப்போ அந்த நாளை காப்பாற்றினான் — Yapo Saves the Day

A young football player passes to a teammate on a grassy field

Listen to the story0:00 / 0:00

யாப்போ தனது கால்பந்தை வைத்து விளையாட விரும்புகிறான்! அவன் அடிக்கடி தனது அப்பாவுடன் பந்தை தட்டி தந்திரங்களை முயற்சிப்பான். ஒரு எலாஸ்டிகோ, ஒரு ரெயின்போ ஃபிளிக் மற்றும்...

... ஒரு மிதிவண்டி உதை கூட!

யாப்போ, டினோ கால்பந்து சங்கத்தின் 6 வயதுக்குட்பட்ட அணியின் முக்கிய வீரன். அவன் மைதானத்தில் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுகிறான். யாப்போ தனது அணிக்காக அதிகமான கோல்களை அடிக்கிறான்.

ஆனால், யாப்போவிற்கு மற்ற வீரர்களுக்கு பந்தை அனுப்ப விருப்பமில்லை. பயிற்சியாளர் டாசி, யாப்போவை தனது அணி வீரர்களுடன் பந்தை பகிர்ந்து கொள்ள அடிக்கடி நினைவூட்டுவார்.

ஒரு நாள், டினோ கால்பந்து சங்கம் குமா கால்பந்து சங்கத்துடன் போட்டியிட்டது. யாப்போ பலமுறை கோல் அடிக்க முயன்றாலும், குமா அணி மிகவும் வலுவாக இருந்தது.

பாதி நேரத்தில், குமா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பயிற்சியாளர் டாசி அணிக்கு கண்டிப்பான அறிவுரை வழங்கினார், 'ஒன்றுபட்டு விளையாடுங்கள், மற்றும் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ அவருக்கு பந்து அனுப்புங்கள்! யாப்போ, பந்தை அனுப்பு!’

இரண்டாம் பாதி தொடங்கியதும், யாப்போ பெஞ்சில் அமர வைக்கப்பட்டான். அவன் இல்லாமல் விளையாட அவரது அணியினர் கொஞ்சம் பயந்தனர், ஆனால் அவர்கள் ஒன்றாக விளையாடுவதை நினைவில் வைத்தனர்.

டினோ அணிக்காக நாட் முதல் கோலை அடித்தான்.

"அருமை!’ என்று கூட்டத்தினர் கத்தினார்கள்.

ஆட்டம் முடிவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன், லிண்டி அணியின் இரண்டாவது கோலை அடித்தாள்!

‘லடுமா!’ என்று அவர்கள் கூச்சலிட்டனர்.

பயிற்சியாளர் டாசி யாப்போவை மீண்டும் விளையாட்டிற்கு அழைத்து, 'புள்ளிகள் இப்போது 2 - 2. நம்மை வெற்றிக்கு கொண்டு செல், கண்ணா!

உன் அணியினருடன் விளையாடுவதை மறக்காதே!'

லிண்டி பந்தை நாட்டை நோக்கி உதைத்தாள் .நாட் அதை யாப்போவுக்கு அனுப்பினான்.

யாப்போ, இரண்டு எதிர் அணி வீரர்களுக்கிடையே பந்தை தட்டி உதைக்க முயன்றபோது, மற்றொரு குமா வீரர் தன்னிடம் விரைவாக வருவதை கவனித்தான்.

யாப்போ, லிண்டி பின்னால் வருவதை பார்த்து, பயிற்சியாளர் டாசியை நினைவுகூர்ந்து பந்தை அவளுக்கு பாஸ் செய்தான்.

லிண்டி கோல் நோக்கி திரும்பி, தன் சிறந்த முயற்சியோடு பந்தை உதைத்தாள்!

‘கோல்!’

என்று பயிற்சியாளர் டாசி கத்தினார்.

லிண்டியின் குழுவினர் அவளை அணைத்துக்கொள்ள ஓடிச் சென்றபோது, டினோ ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் குரல் எழுப்பினர்!

யாப்போ தனது அணி 3 - 2 என்ற கணக்கில் வென்றதற்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தான், ஆனால் அவன் எந்த கோலையும் அடிக்கவில்லை என்பதால் சிறிது ஏமாற்றமடைந்தான்.

‘ஒரு வலிமையான மறுபிரவேசத்திற்கு வாழ்த்துக்கள்! லிண்டிக்கு பந்தை அனுப்பியது சிறந்த செயல் யாப்போ" என்று தனது அணியிடம் மகிழ்ச்சியுடன் கூறினார் பயிற்சியாளர் டாசி.

‘இன்று நீ கோல் அடிக்கவில்லை என்றாலும் உன்னுடைய அணி வெற்றி பெற நீ நிச்சயமாக உதவி செய்தாய். நல்லது, மகனே!’ என்று சிரித்தபடி அப்பாவும் அவனும் ஒன்றாக சேர்ந்து வீட்டிற்குச் சென்றார்கள்.

Section 2: Sentence-by-Sentence Translation

#TamilEnglish
1யாப்போ தனது கால்பந்தை வைத்து விளையாட விரும்புகிறான்!Yapo loves playing with his football!
2அவன் அடிக்கடி தனது அப்பாவுடன் பந்தை தட்டி தந்திரங்களை முயற்சிப்பான்.He often practises ball-dribbling tricks with his father.
3ஒரு எலாஸ்டிகோ, ஒரு ரெயின்போ ஃபிளிக் மற்றும்...An elastico, a rainbow flick and...
4... ஒரு மிதிவண்டி உதை கூட!... even a bicycle kick!
5யாப்போ, டினோ கால்பந்து சங்கத்தின் 6 வயதுக்குட்பட்ட அணியின் முக்கிய வீரன்.Yapo is a key player on Tino Football Club’s under-six team.
6அவன் மைதானத்தில் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுகிறான்.He moves quickly and nimbly on the field.
7யாப்போ தனது அணிக்காக அதிகமான கோல்களை அடிக்கிறான்.Yapo scores many goals for his team.
8ஆனால், யாப்போவிற்கு மற்ற வீரர்களுக்கு பந்தை அனுப்ப விருப்பமில்லை.But Yapo does not want to pass the ball to the other players.
9பயிற்சியாளர் டாசி, யாப்போவை தனது அணி வீரர்களுடன் பந்தை பகிர்ந்து கொள்ள அடிக்கடி நினைவூட்டுவார்.Coach Tazi often reminds Yapo to share the ball with his teammates.
10ஒரு நாள், டினோ கால்பந்து சங்கம் குமா கால்பந்து சங்கத்துடன் போட்டியிட்டது.One day, Tino Football Club played against Kuma Football Club.
11யாப்போ பலமுறை கோல் அடிக்க முயன்றாலும், குமா அணி மிகவும் வலுவாக இருந்தது.Although Yapo tried many times to score, Kuma’s team was very strong.
12பாதி நேரத்தில், குமா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.At halftime, Kuma’s team was leading 2–0.
13பயிற்சியாளர் டாசி அணிக்கு கண்டிப்பான அறிவுரை வழங்கினார், 'ஒன்றுபட்டு விளையாடுங்கள், மற்றும் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ அவருக்கு பந்து அனுப்புங்கள்!Coach Tazi gave the team firm advice: ‘Play together, and pass the ball to whoever has a chance!
14யாப்போ, பந்தை அனுப்பு!’Yapo, pass the ball!’
15இரண்டாம் பாதி தொடங்கியதும், யாப்போ பெஞ்சில் அமர வைக்கப்பட்டான்.When the second half began, Yapo was made to sit on the bench.
16அவன் இல்லாமல் விளையாட அவரது அணியினர் கொஞ்சம் பயந்தனர், ஆனால் அவர்கள் ஒன்றாக விளையாடுவதை நினைவில் வைத்தனர்.His teammates were a little afraid to play without him, but they remembered to play together.
17டினோ அணிக்காக நாட் முதல் கோலை அடித்தான்.Nat scored the first goal for Tino’s team.
18"அருமை!’ என்று கூட்டத்தினர் கத்தினார்கள்.‘Wonderful!’ the crowd shouted.
19ஆட்டம் முடிவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன், லிண்டி அணியின் இரண்டாவது கோலை அடித்தாள்!Three minutes before the game ended, Lindi scored the team’s second goal!
20‘லடுமா!’ என்று அவர்கள் கூச்சலிட்டனர்.‘Laduma!’ they shouted.
21பயிற்சியாளர் டாசி யாப்போவை மீண்டும் விளையாட்டிற்கு அழைத்து, 'புள்ளிகள் இப்போது 2 - 2.Coach Tazi called Yapo back into the game: ‘The score is now 2–2.
22நம்மை வெற்றிக்கு கொண்டு செல், கண்ணா!Lead us to victory, dear boy!
23உன் அணியினருடன் விளையாடுவதை மறக்காதே!'Don’t forget to play with your teammates!’
24லிண்டி பந்தை நாட்டை நோக்கி உதைத்தாள் .Lindi kicked the ball towards Nat.
25நாட் அதை யாப்போவுக்கு அனுப்பினான்.Nat passed it to Yapo.
26யாப்போ, இரண்டு எதிர் அணி வீரர்களுக்கிடையே பந்தை தட்டி உதைக்க முயன்றபோது, மற்றொரு குமா வீரர் தன்னிடம் விரைவாக வருவதை கவனித்தான்.As Yapo tried to dribble and kick the ball between two opposing players, he noticed another Kuma player coming quickly towards him.
27யாப்போ, லிண்டி பின்னால் வருவதை பார்த்து, பயிற்சியாளர் டாசியை நினைவுகூர்ந்து பந்தை அவளுக்கு பாஸ் செய்தான்.Yapo saw Lindi coming behind him, remembered Coach Tazi and passed the ball to her.
28லிண்டி கோல் நோக்கி திரும்பி, தன் சிறந்த முயற்சியோடு பந்தை உதைத்தாள்!Lindi turned towards the goal and kicked the ball with her best effort!
29‘கோல்!’‘Goal!’
30என்று பயிற்சியாளர் டாசி கத்தினார்.shouted Coach Tazi.
31லிண்டியின் குழுவினர் அவளை அணைத்துக்கொள்ள ஓடிச் சென்றபோது, டினோ ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் குரல் எழுப்பினர்!As Lindi’s teammates ran to hug her, Tino’s fans raised their voices in joy!
32யாப்போ தனது அணி 3 - 2 என்ற கணக்கில் வென்றதற்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தான், ஆனால் அவன் எந்த கோலையும் அடிக்கவில்லை என்பதால் சிறிது ஏமாற்றமடைந்தான்.Yapo was very happy that his team had won 3–2, but he was a little disappointed because he had not scored any goals.
33‘ஒரு வலிமையான மறுபிரவேசத்திற்கு வாழ்த்துக்கள்!‘Congratulations on a strong comeback!
34லிண்டிக்கு பந்தை அனுப்பியது சிறந்த செயல் யாப்போ" என்று தனது அணியிடம் மகிழ்ச்சியுடன் கூறினார் பயிற்சியாளர் டாசி.Passing the ball to Lindi was a fine thing to do, Yapo,’ Coach Tazi told his team happily.
35‘இன்று நீ கோல் அடிக்கவில்லை என்றாலும் உன்னுடைய அணி வெற்றி பெற நீ நிச்சயமாக உதவி செய்தாய்.‘Even though you did not score a goal today, you certainly helped your team win.
36நல்லது, மகனே!’ என்று சிரித்தபடி அப்பாவும் அவனும் ஒன்றாக சேர்ந்து வீட்டிற்குச் சென்றார்கள்.Well done, son!’ his father said with a smile, as the two of them went home together.

Section 3: Vocabulary

TamilEnglish lettersEnglish
கால்பந்துkaalpanthufootball
தந்திரங்களைthanthirangalaitricks
மிதிவண்டி உதைmithivandi uthaibicycle kick
அணிaniteam
முக்கிய வீரன்mukkiya veerankey player
மைதானத்தில்maithaanaththilon the field
சுறுசுறுப்பாகவும்surusuruppaagavumand nimbly
பயிற்சியாளர்payirchiyaalarcoach
பகிர்ந்து கொள்ளpagirnthu kollato share
நினைவூட்டுவார்ninaivoottuvaarwould remind
போட்டியிட்டதுpottiyittathucompeted
முன்னிலையில்munnilaiyilin the lead
அறிவுரைarivuraiadvice
ஒன்றுபட்டுondrupattutogether; united
வாய்ப்புvaayppuchance; opportunity
அனுப்புanuppupass; send
பெஞ்சில்benchilon the bench
கூட்டத்தினர்koottaththinarmembers of the crowd
நிமிடங்களுக்குnimidangalukkufor minutes
கூச்சலிட்டனர்koochalittanarthey shouted
மறக்காதேmarakkaathedo not forget
எதிர் அணிethir aniopposing team
கவனித்தான்gavaniththaanhe noticed
முயற்சியோடுmuyarchiyoduwith effort
அணைத்துக்கொள்ளanaiththukkollato hug
ரசிகர்கள்rasigargalfans
மகிழ்ச்சியுடன்magizhchiyudanhappily; with joy
ஏமாற்றமடைந்தான்emaatramadainthaanhe felt disappointed
மறுபிரவேசத்திற்குmarupiravesaththirkufor a comeback
வாழ்த்துக்கள்vaazhththukkalcongratulations
உதவி செய்தாய்uthavi seythaaiyou helped

Book Dash attribution logo

Source: யாப்போ அந்த நாளை காப்பாற்றினான், Tamil translation by Paula Sharon, © Eethal Foundation 2025. Based on Yapo Saves the Day by Rujeko Moyo, illustrated by Liam Longland, designed by Benjamin Tetteh and edited by Nabeela Kalla, © Book Dash 2020. Original and translation: CC BY 4.0. Tamil wording preserved; English translation, reading aid, vocabulary, new illustration and narration by LangFastPro. Original illustrations are not reproduced.

Related lessons