கதைகளின் மூலம் தமிழ் படிக்கலாம்.
Section 1: Tamil Story
துப்பறியும் துரை — Durai the Detective

துரை ஒரு துப்பறிவாளனாக மாறியிருந்தான்.
பின்னே? அவன்தான் கடைக்குச் சென்று ஒரு டார்ச் விளக்கும் பூதக்கண்ணாடியும் வாங்கிவிட்டானே. இனிமேல் எதையாவது துப்பறியவேண்டியதுதான் பாக்கி!
துரையின் தாத்தா, ‘நிஜமாவே ஒரு துப்பறியும் சிங்கம்மாதிரி இருக்கேடா’ என்று அவனைக் கொஞ்சினார். அதைக் கேட்டு அவன் வெட்கத்தோடு சிரித்தான்.
கிராமத்தில் அவர்களுடைய வீட்டின் அருகே ஒரு காடு இருந்தது. அங்கே எதையாவது துப்பறியலாமா என்று தேடத் தொடங்கினான் துரை.
புல்தரை ஈரமாக இருந்தது. அதைப் பார்த்த துரை, ‘இங்கே கொஞ்சநேரம் முன்னாடி மழை பெஞ்சிருக்குன்னு நினைக்கறேன்’ என்று யோசித்தான்.
பரவாயில்லை, டார்ச்சும் பூதக்கண்ணாடியும் பிரமாதமாக வேலை செய்கின்றன! காட்டுக்குள் நுழைந்ததும் அங்கே மழை பெய்திருக்கிற விஷயத்தைத் துப்பறிந்து கண்டுபிடித்தாகிவிட்டது. அடுத்து என்ன?
திடீரென்று, தரையிலிருந்த சில சிவப்புப் பொருள்களைப் பார்த்தான் துரை. ‘இதெல்லாம் என்ன?’
அவை சாதாரணக் காளான்களைப்போலதான் தோன்றின. ஆனால், ஒரு துப்பறிவாளன் இப்படிப் பார்த்ததை உடனே நம்பிவிடலாமா? ஆராய்ந்து உறுதிப்படுத்தவேண்டாமா?
துரை மெதுவாக நடந்து அந்தப் பொருள்களை நெருங்கினான். தன்னுடைய பூதக்கண்ணாடியை வெளியில் எடுத்து, அதன்மூலம் அவற்றைக் கூர்ந்து கவனித்தான்.
அட! அங்கே ஒரு சிறு பெண் சிவப்புக் குடை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
துரை அவளைப் பூதக்கண்ணாடிவழியே பார்த்துவிட்டு, தைரியமான குரலில் கேட்டான், ‘ஏய் பொண்ணே, யார் நீ? இங்கே என்ன பண்ணிகிட்டிருக்கே?’
அவனுடைய கனமான குரலைக் கேட்டு அந்தக் காளான் பெண் பயந்துவிட்டாள். போதாக்குறைக்கு, அவனுடைய கண்கள் பூதக்கண்ணாடியில் இன்னும் பெரிதாகத் தெரிந்தன.
ஆகவே, அவள் பயத்தில் பின்னே நகர்ந்தாள், அவளுடைய குடை விலகி ஓடியது.
அவள் பயந்திருப்பதைப் பூதக்கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொண்டான் துரை. அன்பான குரலில், ‘கவலைப்படாதே, நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன். நாம நண்பர்களா இருப்போம்’ என்றான்.
அந்தப் பெண் அவனை நம்பமுடியாமல் பார்த்தாள். பிறகு, மென்மையான குரலில், ‘மழை இன்னும் பெய்யுதா?’ என்று கேட்டாள்.
‘மழை எப்பவோ நின்னுடுச்சு’ என்றான் துரை, ‘இனிமே உனக்கு அந்த அழகான சிவப்புக் குடை தேவையில்லை, உன் நண்பர்களையும் குடையை மடக்கச்சொல்லு.’
அந்தப் பெண் துரையின் தொப்பிமேல் ஏறி நின்றபடி சிரித்தாள், ‘என் பேர் லலிதா, இவங்க என்னோட அம்மா, அப்பா, அத்தை, தாத்தா, பாட்டி... நாங்க எல்லாரும் இந்தக் காட்டுலதான் வாழறோம்’ என்றாள்.
‘எங்களுக்கு வீடு கட்டத்தெரியாது. அதனால, எப்பவாச்சும் மழை பெஞ்சா, இந்தமாதிரி குடையை விரிச்சுகிட்டுத் தரையில உட்கார்ந்துடுவோம்.’
அதைக் கேட்டதும் துரை பெரிதாகச் சிரித்தான், ‘கவலைப்படாதே லலிதா, வீடு கட்டறது எப்படின்னு உங்களுக்கு நான் சொல்லித்தர்றேன்’ என்றான், ‘உனக்குத் தெரியுமா? நான் ஒரு பெரிய கட்டடக்கலை நிபுணர்ன்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்.’
அதோடு, துரையின் துப்பறியும் கனவு நிறைவடைந்தது, அடுத்த கனவு தொடங்கியது.
Section 2: Sentence-by-Sentence Translation
| # | Tamil | English |
|---|---|---|
| 1 | துரை ஒரு துப்பறிவாளனாக மாறியிருந்தான். | Durai had become a detective. |
| 2 | பின்னே? | Of course he had! |
| 3 | அவன்தான் கடைக்குச் சென்று ஒரு டார்ச் விளக்கும் பூதக்கண்ணாடியும் வாங்கிவிட்டானே. | After all, he had gone to the shop and bought a torch and a magnifying glass. |
| 4 | இனிமேல் எதையாவது துப்பறியவேண்டியதுதான் பாக்கி! | All he needed now was something to investigate! |
| 5 | துரையின் தாத்தா, ‘நிஜமாவே ஒரு துப்பறியும் சிங்கம்மாதிரி இருக்கேடா’ என்று அவனைக் கொஞ்சினார். | ‘You really do look like a lion of a detective, my boy,’ Durai’s grandfather said fondly. |
| 6 | அதைக் கேட்டு அவன் வெட்கத்தோடு சிரித்தான். | Durai smiled shyly when he heard that. |
| 7 | கிராமத்தில் அவர்களுடைய வீட்டின் அருகே ஒரு காடு இருந்தது. | There was a forest near their house in the village. |
| 8 | அங்கே எதையாவது துப்பறியலாமா என்று தேடத் தொடங்கினான் துரை. | Durai started looking around there for something to investigate. |
| 9 | புல்தரை ஈரமாக இருந்தது. | The grass was wet. |
| 10 | அதைப் பார்த்த துரை, ‘இங்கே கொஞ்சநேரம் முன்னாடி மழை பெஞ்சிருக்குன்னு நினைக்கறேன்’ என்று யோசித்தான். | Seeing it, Durai thought, ‘I think it rained here a little while ago.’ |
| 11 | பரவாயில்லை, டார்ச்சும் பூதக்கண்ணாடியும் பிரமாதமாக வேலை செய்கின்றன! | Not bad at all: the torch and magnifying glass were working brilliantly! |
| 12 | காட்டுக்குள் நுழைந்ததும் அங்கே மழை பெய்திருக்கிற விஷயத்தைத் துப்பறிந்து கண்டுபிடித்தாகிவிட்டது. | The moment he entered the forest, he had already worked out that it had rained there. |
| 13 | அடுத்து என்ன? | What next? |
| 14 | திடீரென்று, தரையிலிருந்த சில சிவப்புப் பொருள்களைப் பார்த்தான் துரை. | Suddenly, Durai spotted some red objects on the ground. |
| 15 | ‘இதெல்லாம் என்ன?’ | ‘What are those?’ |
| 16 | அவை சாதாரணக் காளான்களைப்போலதான் தோன்றின. | They looked like ordinary mushrooms. |
| 17 | ஆனால், ஒரு துப்பறிவாளன் இப்படிப் பார்த்ததை உடனே நம்பிவிடலாமா? | But could a detective just take what he saw at face value? |
| 18 | ஆராய்ந்து உறுதிப்படுத்தவேண்டாமா? | Shouldn’t he look closer and make sure? |
| 19 | துரை மெதுவாக நடந்து அந்தப் பொருள்களை நெருங்கினான். | Durai walked slowly up to the objects. |
| 20 | தன்னுடைய பூதக்கண்ணாடியை வெளியில் எடுத்து, அதன்மூலம் அவற்றைக் கூர்ந்து கவனித்தான். | He took out his magnifying glass and studied them closely. |
| 21 | அட! | Oh! |
| 22 | அங்கே ஒரு சிறு பெண் சிவப்புக் குடை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். | There sat a tiny girl holding a red umbrella. |
| 23 | துரை அவளைப் பூதக்கண்ணாடிவழியே பார்த்துவிட்டு, தைரியமான குரலில் கேட்டான், ‘ஏய் பொண்ணே, யார் நீ? இங்கே என்ன பண்ணிகிட்டிருக்கே?’ | Durai looked at her through the magnifying glass and asked in a bold voice, ‘Hey, girl, who are you? What are you doing here?’ |
| 24 | அவனுடைய கனமான குரலைக் கேட்டு அந்தக் காளான் பெண் பயந்துவிட்டாள். | The mushroom girl was frightened by his deep voice. |
| 25 | போதாக்குறைக்கு, அவனுடைய கண்கள் பூதக்கண்ணாடியில் இன்னும் பெரிதாகத் தெரிந்தன. | On top of that, his eyes looked even bigger through the magnifying glass. |
| 26 | ஆகவே, அவள் பயத்தில் பின்னே நகர்ந்தாள், அவளுடைய குடை விலகி ஓடியது. | She backed away in fright, and her umbrella skittered away. |
| 27 | அவள் பயந்திருப்பதைப் பூதக்கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொண்டான் துரை. | Looking through the magnifying glass, Durai realized she was afraid. |
| 28 | அன்பான குரலில், ‘கவலைப்படாதே, நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன். நாம நண்பர்களா இருப்போம்’ என்றான். | He said gently, ‘Don’t worry. I won’t hurt you. Let’s be friends.’ |
| 29 | அந்தப் பெண் அவனை நம்பமுடியாமல் பார்த்தாள். | The girl looked at him in disbelief. |
| 30 | பிறகு, மென்மையான குரலில், ‘மழை இன்னும் பெய்யுதா?’ என்று கேட்டாள். | Then she asked softly, ‘Is it still raining?’ |
| 31 | ‘மழை எப்பவோ நின்னுடுச்சு’ என்றான் துரை, ‘இனிமே உனக்கு அந்த அழகான சிவப்புக் குடை தேவையில்லை, உன் நண்பர்களையும் குடையை மடக்கச்சொல்லு.’ | ‘The rain stopped ages ago,’ said Durai. ‘You don’t need that pretty red umbrella anymore. Tell your friends to fold their umbrellas too.’ |
| 32 | அந்தப் பெண் துரையின் தொப்பிமேல் ஏறி நின்றபடி சிரித்தாள், ‘என் பேர் லலிதா, இவங்க என்னோட அம்மா, அப்பா, அத்தை, தாத்தா, பாட்டி... நாங்க எல்லாரும் இந்தக் காட்டுலதான் வாழறோம்’ என்றாள். | The girl climbed onto Durai’s cap, stood there and smiled. ‘My name’s Lalitha. This is my mum, my dad, my aunt, my grandpa and my grandma. We all live right here in the forest,’ she said. |
| 33 | ‘எங்களுக்கு வீடு கட்டத்தெரியாது. | ‘We don’t know how to build houses. |
| 34 | அதனால, எப்பவாச்சும் மழை பெஞ்சா, இந்தமாதிரி குடையை விரிச்சுகிட்டுத் தரையில உட்கார்ந்துடுவோம்.’ | So whenever it rains, we open our umbrellas and sit on the ground like this.’ |
| 35 | அதைக் கேட்டதும் துரை பெரிதாகச் சிரித்தான், ‘கவலைப்படாதே லலிதா, வீடு கட்டறது எப்படின்னு உங்களுக்கு நான் சொல்லித்தர்றேன்’ என்றான், ‘உனக்குத் தெரியுமா? நான் ஒரு பெரிய கட்டடக்கலை நிபுணர்ன்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்.’ | Durai laughed out loud when he heard that. ‘Don’t worry, Lalitha. I’ll teach you all how to build houses,’ he said. ‘You know what? My dad often says I’m a great architect.’ |
| 36 | அதோடு, துரையின் துப்பறியும் கனவு நிறைவடைந்தது, அடுத்த கனவு தொடங்கியது. | And with that, Durai’s dream of being a detective was fulfilled, and his next dream began. |
Section 3: Vocabulary
Durai and Lalitha speak conversational Tamil. The story uses பெஞ்சா for “if it rains”; in formal writing you may see பெய்தால்.
| Tamil (தமிழ்) | Transliteration | Part of Speech | English Meaning |
|---|---|---|---|
| துப்பறிவாளனாக | thupparivaalanaaga | Noun + ending | as a detective |
| கடைக்குச் | kadaikkuch | Noun + ending | to the shop |
| டார்ச் விளக்கும் | taarch vilakkum | Noun phrase | a flashlight (first of two items) |
| பூதக்கண்ணாடியும் | boothakkannaadiyum | Noun + ending | and a magnifying glass |
| வெட்கத்தோடு | vetkaththodu | Adverbial phrase | shyly; with embarrassment |
| கிராமத்தில் | giraamaththil | Noun + ending | in the village |
| அருகே | aruge | Adverb | nearby; close to |
| புல்தரை | puldharai | Noun | grassy ground |
| ஈரமாக | eeramaaga | Adverbial form | wet; in a wet state |
| மழை | mazhai | Noun | rain |
| திடீரென்று | thideerendru | Adverb | suddenly |
| காளான்களைப்போலதான் | kaalaangalaippoladhaan | Comparative phrase | just like mushrooms |
| மெதுவாக | medhuvaaga | Adverb | slowly |
| கூர்ந்து | koorndhu | Adverbial verb form | closely; attentively |
| சிவப்புக் குடை | sivappuk kudai | Noun phrase | red umbrella |
| தைரியமான | thairiyamaana | Adjective | bold; confident |
| போதாக்குறைக்கு | podhaakkuraikku | Adverb | on top of that |
| பின்னே | pinne | Adverb | backwards (as she moved away) |
| கவலைப்படாதே | gavalaippadaadhe | Verb | don’t worry |
| மென்மையான | menmaiyaana | Adjective | soft; gentle |
| தொப்பிமேல் | thoppimel | Noun + postposition | on top of the cap |
| தரையில | tharaiyila | Noun + ending | on the ground (spoken form) |
| அடிக்கடி | adikkadi | Adverb | often |
| கனவு | kanavu | Noun | dream |
Source: துப்பறியும் துரை by N. Chokkan, created with N. Nangai and N. Mangai and originally illustrated by Megha Vishwanath (© StoryWeaver, 2015), first published on StoryWeaver under CC BY 4.0. English translation, Roman reading aid and learning notes by LangFastPro.




