ஏழை பெண் — The Poor Lady

LangFastPro Editorial Team's avatar
Lesson prepared byLangFastPro Editorial Team
More

கதைகள் வழியாகத் தமிழ் கற்போம்.

Section 1: Tamil Story

ஏழை பெண் — The Poor Lady

A joyful woman riding a magical wooden tray through a moonlit sky above village lights

Listen to the story0:00 / 0:00

ஒரு காலத்தில் ஒரு ஏழை பெண் இருந்தாள். அவள் தனது நான்கு குழந்தைகளுடன் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்தாள்.

அவள் ஒரு நாள் வானத்தில் பறக்க வேண்டும் என்று கனவு கண்டாள். ஆனால் அவளிடம் விமானம் வாங்க பணம் இல்லை.

அவள், மேகங்கள், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை அருகில் சென்று பார்க்க விரும்பினாள். தினமும் மரத்தடியில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

ஒரு நாள் அவள் மரத்தடியில் நடந்து கொண்டிருந்த போது ஒரு குச்சியைக் கண்டாள்.

அந்த குச்சியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.

வீட்டில், அந்த குச்சி பேச ஆரம்பித்தது. "நீ பறக்க விரும்புகிறாய் என்று எனக்குத் தெரியும், நான் உனக்கு உதவுகிறேன்."

அந்த பெண்மணி மகிழ்ச்சியடைந்தாள். "நான் எப்போது பறப்பேன்?" அவள் கேட்டாள் . "நாளை, இரவில்." “அப்படியா?”

குச்சியுடன் பறப்பதைப் பற்றி அவள் தன் குழந்தைகளுக்குச் சொன்னாள். "அம்மா! உங்களுக்கு உடம்பு சரியில்லையா அல்லது சோர்வாக இருக்கிறதா?"

“நாளை இரவு, ஜன்னல் வழியே பாருங்கள். நான் பறப்பதை நீங்கள் காண்பீர்கள்."

குச்சி மரத்தட்டாக மாறி அவளை பறக்க வைத்தது.

சந்திரன், குன்றுகள் மற்றும் மேகங்களை பார்த்தாள்.

பிறகு, விளக்குகளைப் பார்த்தாள்.

அரை மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாள்.

அடுத்த முறை நான் என் குழந்தைகளுடன் பறக்கிறேன்.

Section 2: Sentence-by-Sentence Translation

#Tamil (தமிழ்)English Translation
1ஒரு காலத்தில் ஒரு ஏழை பெண் இருந்தாள்.Once there was a poor woman.
2அவள் தனது நான்கு குழந்தைகளுடன் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்தாள்.She lived in a small village with her four children.
3அவள் ஒரு நாள் வானத்தில் பறக்க வேண்டும் என்று கனவு கண்டாள்.She dreamed of flying in the sky one day.
4ஆனால் அவளிடம் விமானம் வாங்க பணம் இல்லை.But she did not have money to buy an aeroplane.
5அவள், மேகங்கள், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை அருகில் சென்று பார்க்க விரும்பினாள்.She wanted to go close to the clouds, the moon and the stars and see them.
6தினமும் மரத்தடியில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.Every day she sat under a tree, looking at the sky.
7ஒரு நாள் அவள் மரத்தடியில் நடந்து கொண்டிருந்த போது ஒரு குச்சியைக் கண்டாள்.One day, while walking beneath a tree, she found a stick.
8அந்த குச்சியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.She picked up that stick and went home.
9வீட்டில், அந்த குச்சி பேச ஆரம்பித்தது.At home, the stick began to speak.
10"நீ பறக்க விரும்புகிறாய் என்று எனக்குத் தெரியும், நான் உனக்கு உதவுகிறேன்."“I know you want to fly. I will help you.”
11அந்த பெண்மணி மகிழ்ச்சியடைந்தாள்.The woman became happy.
12"நான் எப்போது பறப்பேன்?" அவள் கேட்டாள் .“When will I fly?” she asked.
13"நாளை, இரவில்."“Tomorrow, at night.”
14“அப்படியா?”“Really?”
15குச்சியுடன் பறப்பதைப் பற்றி அவள் தன் குழந்தைகளுக்குச் சொன்னாள்.She told her children about flying with the stick.
16"அம்மா! உங்களுக்கு உடம்பு சரியில்லையா அல்லது சோர்வாக இருக்கிறதா?"“Mother! Are you unwell, or are you tired?”
17“நாளை இரவு, ஜன்னல் வழியே பாருங்கள்.“Look through the window tomorrow night.
18நான் பறப்பதை நீங்கள் காண்பீர்கள்."You will see me flying.”
19குச்சி மரத்தட்டாக மாறி அவளை பறக்க வைத்தது.The stick turned into a wooden tray and made her fly.
20சந்திரன், குன்றுகள் மற்றும் மேகங்களை பார்த்தாள்.She saw the moon, hills and clouds.
21பிறகு, விளக்குகளைப் பார்த்தாள்.Then she saw the lights.
22அரை மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாள்.After half an hour, she came home.
23அடுத்த முறை நான் என் குழந்தைகளுடன் பறக்கிறேன்.Next time, I am flying with my children.

Section 3: Vocabulary

Tamil (தமிழ்)English lettersPart of speechEnglish meaning
ஏழைezhaiAdjectivepoor
பெண்penNounwoman
நான்குnaanguNumberfour
குழந்தைகளுடன்kuzhanthaigaludanNoun + endingwith the children
கிராமத்தில்kiraamaththilNoun + endingin a village
வானத்தில்vaanaththilNoun + endingin the sky
பறக்கparakkaVerbto fly
கனவுkanavuNoundream
விமானம்vimaanamNounaeroplane
பணம்panamNounmoney
மேகங்கள்megangalNounclouds
சந்திரன்santhiranNounmoon
நட்சத்திரங்களைnatchaththirangalaiNoun + endingthe stars
மரத்தடியில்maraththadiyilNoun + endingunder a tree
குச்சிkuchchiNounstick
உதவுகிறேன்uthavugirenVerbI help; I will help
நாளைnaalaiAdverbtomorrow
இரவில்iravilNoun + endingat night
ஜன்னல்jannalNounwindow
மரத்தட்டாகmaraththattaagaNoun + endinginto a wooden tray
குன்றுகள்kundrugalNounhills
விளக்குகளைப்vilakkugalaipNoun + endingthe lights
அரை மணி நேரம்arai mani neramPhrasehalf an hour

Source: ஏழை பெண், Tamil translation by Rohit M (© 2022), based on The Poor Lady by Larry Semiono (© Soma Bookcafe, 2020), both under CC BY 4.0. Tamil text transcribed from the licensed edition. New English translation, reading aids and narrated adaptation by LangFastPro; original book illustrations are not reproduced.

Related lessons