பெரியவளா? சிறியவளா? — Too Big? Too Small?

LangFastPro Editorial Team's avatar
Lesson prepared byLangFastPro Editorial Team
More

கதைகள் மூலம் தமிழ் கற்போம்.

Section 1: Tamil Story

பெரியவளா? சிறியவளா? — Too Big? Too Small?

Shanu smiling in a loving hug with her parents and grandparents.

Listen to the story0:00 / 0:00

“என்னால் உன்னைத் தூக்க முடியாது, ஷானு!” என்கிறார் அம்மா.

“நீ ரொம்பப் பெரியவள்!”

“உன்னால் பள்ளிக்குத் தனியாக நடந்து போக முடியாது, ஷானு!” என்கிறார் அப்பா.

“நீ ரொம்பச் சிறியவள்!”

“உன்னால் பாப்பாவின் கட்டிலில் தூங்க முடியாது, ஷானு!” என்கிறார் தாத்தா.

“நீ ரொம்பப் பெரியவள்!”

“உன்னால் பாப்பாவைப் பூங்காவிற்கு தூக்கிச் செல்ல முடியாது, ஷானு!” என்கிறார் பாட்டி.

“நீ ரொம்பச் சிறியவள்!”

ஷானுவுக்கு ஒரே குழப்பம். “நான் ரொம்பப் பெரியவளா? ரொம்பச் சிறியவளா?”

அவள் எப்படி ஒரே சமயத்தில் ரொம்பப் பெரியவளாகவும் ரொம்பச் சிறியவளாகவும் இருக்க முடியும்?

ஷானு, தனது பழைய இளஞ்சிவப்பு கவுனை அணிவதற்கு ரொம்பப் பெரியவள்.

அடுப்பில் தோசை சுடுவதற்கோ ரொம்பச் சிறியவள்.

தாத்தாவின் முதுகில் சவாரி செய்ய ரொம்பப் பெரியவள்.

பாப்பாவைத் தூக்கிச் செல்ல ரொம்பச் சிறியவள்.

“எதற்குத்தான் நான் சரியான அளவாக இருப்பேன்?” என்று ஷானு வியக்கிறாள்.

அம்மா சிரித்துக் கொண்டே “பள்ளிக்குச் செல்ல நீ பெரியவள்தான்!" என்கிறார்.

“நான் தோளில் தூக்கிச் செல்ல நீ சிறியவள்தான்!” என்றார் அப்பா.

“காலை என்னோடு நடைபயிற்சி வர நீ பெரியவள்தான்!” என்றார் தாத்தா.

“நான் கதைகள் சொல்வதற்கு நீ சிறியவள்தான்!” என்றார் பாட்டி.

“ஆனால், நீ எப்பொழுதுமே சரியான அளவுதான்… இதற்கு!” என்று கூறி, அவர்கள் எல்லோரும் அவளை அன்புடன் கட்டி அணைத்துக் கொண்டார்கள்.

Section 2: Sentence-by-Sentence Translation

#Tamil (தமிழ்)English Translation
1“என்னால் உன்னைத் தூக்க முடியாது, ஷானு!” என்கிறார் அம்மா.“I can’t carry you, Shanu!” says Mother.
2“நீ ரொம்பப் பெரியவள்!”“You’re too big!”
3“உன்னால் பள்ளிக்குத் தனியாக நடந்து போக முடியாது, ஷானு!” என்கிறார் அப்பா.“You can’t walk to school on your own, Shanu!” says Father.
4“நீ ரொம்பச் சிறியவள்!”“You’re too small!”
5“உன்னால் பாப்பாவின் கட்டிலில் தூங்க முடியாது, ஷானு!” என்கிறார் தாத்தா.“You can’t sleep in the baby’s cot, Shanu!” says Grandfather.
6“நீ ரொம்பப் பெரியவள்!”“You’re too big!”
7“உன்னால் பாப்பாவைப் பூங்காவிற்கு தூக்கிச் செல்ல முடியாது, ஷானு!” என்கிறார் பாட்டி.“You can’t carry the baby to the park, Shanu!” says Grandmother.
8“நீ ரொம்பச் சிறியவள்!”“You’re too small!”
9ஷானுவுக்கு ஒரே குழப்பம்.Shanu is very confused.
10“நான் ரொம்பப் பெரியவளா? ரொம்பச் சிறியவளா?”“Am I too big? Too small?”
11அவள் எப்படி ஒரே சமயத்தில் ரொம்பப் பெரியவளாகவும் ரொம்பச் சிறியவளாகவும் இருக்க முடியும்?How can she be too big and too small at the same time?
12ஷானு, தனது பழைய இளஞ்சிவப்பு கவுனை அணிவதற்கு ரொம்பப் பெரியவள்.Shanu is too big to wear her old pink dress.
13அடுப்பில் தோசை சுடுவதற்கோ ரொம்பச் சிறியவள்.But she is too small to cook dosas on the stove.
14தாத்தாவின் முதுகில் சவாரி செய்ய ரொம்பப் பெரியவள்.Too big to ride on Grandfather’s back.
15பாப்பாவைத் தூக்கிச் செல்ல ரொம்பச் சிறியவள்.Too small to carry the baby.
16“எதற்குத்தான் நான் சரியான அளவாக இருப்பேன்?” என்று ஷானு வியக்கிறாள்.“What am I just the right size for?” Shanu wonders.
17அம்மா சிரித்துக் கொண்டே “பள்ளிக்குச் செல்ல நீ பெரியவள்தான்!" என்கிறார்.Mother smiles and says, “You’re big enough to go to school!”
18“நான் தோளில் தூக்கிச் செல்ல நீ சிறியவள்தான்!” என்றார் அப்பா.“You’re small enough for me to carry you on my shoulder!” says Father.
19“காலை என்னோடு நடைபயிற்சி வர நீ பெரியவள்தான்!” என்றார் தாத்தா.“You’re big enough to join me for a morning walk!” says Grandfather.
20“நான் கதைகள் சொல்வதற்கு நீ சிறியவள்தான்!” என்றார் பாட்டி.“You’re small enough for me to tell you stories!” says Grandmother.
21“ஆனால், நீ எப்பொழுதுமே சரியான அளவுதான்… இதற்கு!” என்று கூறி, அவர்கள் எல்லோரும் அவளை அன்புடன் கட்டி அணைத்துக் கொண்டார்கள்.“But you’re always just the right size… for this!” they say, and everyone gives her a loving hug.

Section 3: Vocabulary

சில சொற்கள் அடிப்படை வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. / Some entries use base forms rather than the inflected forms in the story.

TamilTransliterationPart of SpeechEnglish Meaning
அம்மாammaaNounmother
அப்பாappaaNounfather
தாத்தாthaaththaaNoungrandfather
பாட்டிpaattiNoungrandmother
பாப்பாpaappaaNounbaby
பெரியவள்periyavalNouna big or older girl
சிறியவள்siriyavalNouna small or younger girl
ரொம்பrombaAdverbvery; too, in this story
பள்ளிpalliNounschool
கட்டில்kattilNounbed; cot
பூங்காpoongaaNounpark
குழப்பம்kuzhappamNounconfusion
பழையpazhaiyaAdjectiveold
இளஞ்சிவப்புilanchivappuNoun / adjectivepink
கவுன்gavunNoundress; gown
அடுப்புaduppuNounstove
தோசைdhohsaiNoundosa
முதுகுmudhuguNounback
சவாரிsavaariNounride
சரியானsariyaanaAdjectiveright; suitable
அளவுalavuNounsize; measure
நடைபயிற்சிnadaipayirchiNounwalking for exercise

பெரியவள் / சிறியவள்: இவை ஒரு பெண்ணைக் குறிக்கும் சொற்கள். / These forms refer to a girl or woman. In this story, “too big” and “too small” depend on what Shanu wants to do.

Roman spellings are reading aids: aa, ee and oo mark long vowels; ay represents ஏ and oh represents ஓ. Keep these vowel sounds steady. The th spelling represents the dental Tamil t, not the English sound in “thin”; zh represents ழ. Different Tamil n, l and r letters can share a simple Roman spelling.

Explore another language with this related lesson:

Source: பெரியவளா? சிறியவளா? by Lavanya Karthik; Tamil translation by Praba Ram and Sheela Preuitt (© Pratham Books, 2017), published by Pratham Books; Tamil text on Libbify, from the English story Too Big! Too Small!, CC BY 4.0. Developed with support from Parag, an initiative of Tata Trusts. Source Tamil retained; new English translation and learning notes by LangFastPro.

Related lessons