A twelve-year-old walks ten miles to ask for his father’s release. The official needs someone to stand bail, and the boy makes an unexpected offer.
Section 1: Tamil Story
சிறுவனின் புத்திசாலித்தனம் — The Clever Boy

ஒரு கிராமத்தில் புரோகிதர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குப் பூர்வீகமாக சிறிது நிலம் இருந்தது. அந்த நிலத்துக்கு வரி செலுத்தவில்லை. அதனால், மாவட்ட ஆட்சியாளர் ஆணையின் படி, புரோகிதரை சிறையில் அடைத்தனர். புரோகிதரின் தந்தை இறந்து ஒரு வருடம் ஆயிற்று. அந்த நினைவுக்காக, சமூக வழக்கப்படி, சடங்குகள் செய்வது வழக்கம்.
புரோகிதரோ சிறையில் இருக்கிறாரே, எப்படிச் செய்வது? “ஊராருக்கெல்லாம் நினைவுபடுத்தி, சடங்குகள் செய்வாரே, அவருடைய தந்தைக்குச் சடங்கு செய்ய முடியாமல், அவர் சிறையில் அடைபட்டுக் கிடக்கும்படி ஆயிற்றே" என்று புரோகிதரின் மனைவி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.
புரோகிதருக்கு ஒரு மகன் இருந்தான். அவனுக்கு வயது பன்னிரண்டு. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்.
விடிந்தால் சடங்கு நாள். தாயின் துக்கத்தையும், தந்தையின் நிலையையும் நினைத்து, இரவு முழுதும் தூங்காமலேயே யோசனை செய்தபடி இருந்தான் சிறுவன். விடியற்காலையில் எழுந்து, நடந்தே பத்து மைல் தொலைவில் இருந்த மாவட்ட ஆட்சியாளர் பங்களாவை அடைந்தான்.
ஆட்சியாளரின் காலடியில் விழுந்து வணங்கினான்; கண்ணீர் ததும்ப நிலைமையைப் பணிவோடு கூறினான் சிறுவன்.
“உன் கோரிக்கையை ஏற்று உன் தந்தையை மூன்று நாள் மட்டும் விடுவிக்கிறேன். அதற்கு யாராவது ஜாமீன் கொடுக்க வேண்டும்” என்றார் ஆட்சியாளர்.
“ஜாமீன் கொடுக்க, எங்களுக்கு எவருமே முன் வர மாட்டார்கள். ஒரே ஒரு வழிதான் உண்டு. என் தந்தை திரும்பி வரும் வரையில், அந்த மூன்று நாட்களுக்கும் நான் சிறையில் இருக்கிறேன்” என்றான் சிறுவன். பன்னிரண்டு வயது சிறுவனிடமிருந்து கிடைத்த பதில், ஆட்சியாளரின் உள்ளத்தை நெகிழச் செய்து விட்டது.
உடனே, ஜாமீன் இல்லாமலேயே, புரோகிதரை, மூன்று நாட்கள் விடுதலை செய்ய உத்தரவிட்டார் ஆட்சியாளர்.
தந்தையும், மகனும் கிராமத்துக்கு விரைந்து வந்து, நடத்த வேண்டிய சடங்குகளை செய்து முடித்தனர். கிராம மக்கள் அனைவரும் சிறுவனைப் பாராட்டினார்கள். புரோகிதர் மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிறை சென்றார்.
Section 2: Tamil and English
| # | Tamil (தமிழ்) | English Translation |
|---|---|---|
| 1 | ஒரு கிராமத்தில் புரோகிதர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குப் பூர்வீகமாக சிறிது நிலம் இருந்தது. அந்த நிலத்துக்கு வரி செலுத்தவில்லை. அதனால், மாவட்ட ஆட்சியாளர் ஆணையின் படி, புரோகிதரை சிறையில் அடைத்தனர். புரோகிதரின் தந்தை இறந்து ஒரு வருடம் ஆயிற்று. அந்த நினைவுக்காக, சமூக வழக்கப்படி, சடங்குகள் செய்வது வழக்கம். | A priest lived in a village. He had a little land that he had inherited. He did not pay the tax on it, so he was put in jail on the district administrator’s orders. It had been a year since the priest’s father died. By local custom, the family would perform rites in his memory. |
| 2 | புரோகிதரோ சிறையில் இருக்கிறாரே, எப்படிச் செய்வது? “ஊராருக்கெல்லாம் நினைவுபடுத்தி, சடங்குகள் செய்வாரே, அவருடைய தந்தைக்குச் சடங்கு செய்ய முடியாமல், அவர் சிறையில் அடைபட்டுக் கிடக்கும்படி ஆயிற்றே" என்று புரோகிதரின் மனைவி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். | But how could they do it with the priest in jail? “He reminds everyone in the village and performs the rites for them. Now he’s locked away and can’t do them for his own father,” his wife cried. |
| 3 | புரோகிதருக்கு ஒரு மகன் இருந்தான். அவனுக்கு வயது பன்னிரண்டு. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். | The priest had a son. He was twelve years old and went to school. |
| 4 | விடிந்தால் சடங்கு நாள். தாயின் துக்கத்தையும், தந்தையின் நிலையையும் நினைத்து, இரவு முழுதும் தூங்காமலேயே யோசனை செய்தபடி இருந்தான் சிறுவன். விடியற்காலையில் எழுந்து, நடந்தே பத்து மைல் தொலைவில் இருந்த மாவட்ட ஆட்சியாளர் பங்களாவை அடைந்தான். | The rites were due the next day. Thinking about his mother’s grief and his father’s situation, the boy stayed awake all night trying to think of something. At dawn he got up and walked ten miles to the district administrator’s bungalow. |
| 5 | ஆட்சியாளரின் காலடியில் விழுந்து வணங்கினான்; கண்ணீர் ததும்ப நிலைமையைப் பணிவோடு கூறினான் சிறுவன். | The boy fell at the administrator’s feet in supplication. With tears in his eyes, he respectfully explained the situation. |
| 6 | “உன் கோரிக்கையை ஏற்று உன் தந்தையை மூன்று நாள் மட்டும் விடுவிக்கிறேன். அதற்கு யாராவது ஜாமீன் கொடுக்க வேண்டும்” என்றார் ஆட்சியாளர். | “I’ll grant your request and release your father, but only for three days. Someone will have to stand bail for him,” said the administrator. |
| 7 | “ஜாமீன் கொடுக்க, எங்களுக்கு எவருமே முன் வர மாட்டார்கள். ஒரே ஒரு வழிதான் உண்டு. என் தந்தை திரும்பி வரும் வரையில், அந்த மூன்று நாட்களுக்கும் நான் சிறையில் இருக்கிறேன்” என்றான் சிறுவன். பன்னிரண்டு வயது சிறுவனிடமிருந்து கிடைத்த பதில், ஆட்சியாளரின் உள்ளத்தை நெகிழச் செய்து விட்டது. | “No one will come forward to stand bail for us. There’s only one way. I’ll stay in jail for those three days, until my father comes back,” said the boy. The twelve-year-old’s answer moved the administrator. |
| 8 | உடனே, ஜாமீன் இல்லாமலேயே, புரோகிதரை, மூன்று நாட்கள் விடுதலை செய்ய உத்தரவிட்டார் ஆட்சியாளர். | At once, the administrator ordered that the priest be released for three days without bail. |
| 9 | தந்தையும், மகனும் கிராமத்துக்கு விரைந்து வந்து, நடத்த வேண்டிய சடங்குகளை செய்து முடித்தனர். கிராம மக்கள் அனைவரும் சிறுவனைப் பாராட்டினார்கள். புரோகிதர் மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிறை சென்றார். | Father and son hurried back to the village and carried out the rites. Everyone in the village praised the boy. After three days, the priest went back to jail. |
Section 3: Vocabulary
| Tamil (தமிழ்) | Transliteration | Part of Speech | English Meaning |
|---|---|---|---|
| பூர்வீகமாக | poorveegamaaga | adverb | by inheritance |
| வரி | vari | noun | tax |
| சடங்கு | sadangu | noun | rite; ceremony |
| துக்கம் | thukkam | noun | grief |
| விடியற்காலையில் | vidiyarkaalaiyil | time expression | at dawn |
| கண்ணீர் | kanneer | noun | tears |
| பணிவோடு | panivodu | adverb | respectfully |
| கோரிக்கை | korikkai | noun | request |
| ஜாமீன் | jaameen | noun | bail; a guarantee of return |
| விடுதலை | viduthalai | noun | release |
| பாராட்டினார்கள் | paaraattinaargal | verb | praised |
| மீண்டும் | meendum | adverb | again |
Source: சிறுவனின் புத்திசாலித்தனம் by Mullai P. L. Muthiah, from சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள் (Mullai Pathipagam, 2nd ed., 2006), digitized by Tamil Virtual Academy and Tamil Wikisource and released under CC0 1.0. English translation and learning material by LangFastPro.




