கதைகள் மூலம் தமிழ் கற்போம்.
Section 1: Tamil Story
மானின் சிரிப்பு — The Fawn’s Smile

காட்டிற்குள் ஒரு இள மான் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது.
அடடே! முயலையே முந்தி விட்டது!
யானையைக் கூட முந்தி விட்டதே!
ஓடையை ஒரே தாவாகத் தாவி விட்டது!
தகர்ந்து கிடந்த சுவரையும் தாண்டி ஓடியது.
புல்தரையில் இருந்த பெரிய பாறாங்கல்லை கவனிக்காமல் ஓடியதால் கால் தடுமாறி கீழே விழுந்து விட்டது.
பாவம்… கண்ணீரில் மூழ்கி விட்டது...
குரங்கு ஒன்று மெதுவாக மானின் காலைத் தடவிக் கொடுத்தது. மானின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
கரடி அண்ணன் மானை முதுகில் தூக்கி கொண்டு போனது. மானிற்கு அழுகை இன்னும் நிற்கவில்லை.
மானின் அம்மா ஓடி வந்து, “அழாதே! அந்தக் கெட்ட பாறாங்கல்லை நாம் அடித்து விடலாம்” என்று சொன்னது.
உடனே மான், “வேண்டாம் அம்மா… அதற்கு வலித்தால் அதுவும் அழ ஆரம்பித்து விடும்” என்றது. இதைக் கேட்டதும் தாய் மானுக்குச் சிரிப்பு வந்தது. குட்டி மானும் சேர்ந்து சிரித்தது.
Section 2: Sentence-by-Sentence Translation
| # | Tamil | English |
|---|---|---|
| 1 | காட்டிற்குள் ஒரு இள மான் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. | A young deer was running fast through the forest. |
| 2 | அடடே! முயலையே முந்தி விட்டது! | Wow! It had overtaken even the rabbit! |
| 3 | யானையைக் கூட முந்தி விட்டதே! | It had overtaken even the elephant! |
| 4 | ஓடையை ஒரே தாவாகத் தாவி விட்டது! | It cleared the stream in a single leap! |
| 5 | தகர்ந்து கிடந்த சுவரையும் தாண்டி ஓடியது. | It jumped over a broken wall and ran on. |
| 6 | புல்தரையில் இருந்த பெரிய பாறாங்கல்லை கவனிக்காமல் ஓடியதால் கால் தடுமாறி கீழே விழுந்து விட்டது. | It did not notice the large rock on the grass, so it stumbled and fell. |
| 7 | பாவம்… கண்ணீரில் மூழ்கி விட்டது... | Poor thing… it burst into tears... |
| 8 | குரங்கு ஒன்று மெதுவாக மானின் காலைத் தடவிக் கொடுத்தது. | A monkey gently rubbed the deer’s leg. |
| 9 | மானின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. | Tears kept flowing from the deer’s eyes. |
| 10 | கரடி அண்ணன் மானை முதுகில் தூக்கி கொண்டு போனது. | Brother Bear carried the deer on his back. |
| 11 | மானிற்கு அழுகை இன்னும் நிற்கவில்லை. | The deer still could not stop crying. |
| 12 | மானின் அம்மா ஓடி வந்து, “அழாதே! அந்தக் கெட்ட பாறாங்கல்லை நாம் அடித்து விடலாம்” என்று சொன்னது. | The deer’s mother came running and said, “Don’t cry! Let’s hit that naughty rock.” |
| 13 | உடனே மான், “வேண்டாம் அம்மா… அதற்கு வலித்தால் அதுவும் அழ ஆரம்பித்து விடும்” என்றது. | At once, the deer said, “No, Mother… if it gets hurt, it will start crying too.” |
| 14 | இதைக் கேட்டதும் தாய் மானுக்குச் சிரிப்பு வந்தது. | Hearing this, the mother deer began to laugh. |
| 15 | குட்டி மானும் சேர்ந்து சிரித்தது. | The little deer laughed along with her. |
Section 3: Vocabulary
சில சொற்கள் அடிப்படை வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. / Some entries use base forms rather than the inflected forms in the story.
Roman spellings are simple reading aids. Hold aa, ee and oo longer; ay and oh stand for steady long e and o sounds. Some Tamil sound distinctions share a simple spelling here.
| Tamil | Pronunciation | Part of speech | Meaning |
|---|---|---|---|
| காடு | kaadu | noun | forest |
| மான் | maan | noun | deer |
| வேகமாக | vaygamaaga | adverb | quickly |
| முயல் | muyal | noun | rabbit |
| யானை | yaanai | noun | elephant |
| ஓடை | ohdai | noun | stream |
| சுவர் | suvar | noun | wall |
| புல்தரை | pultharai | noun | grassy ground |
| பாறாங்கல் | paaraangal | noun | large rock; boulder |
| கால் | kaal | noun | leg; foot |
| கீழே | keezhay | adverb | down; below |
| கண்ணீர் | kanneer | noun | tears |
| குரங்கு | kurangu | noun | monkey |
| மெதுவாக | medhuvaaga | adverb | gently; slowly |
| கரடி | karadi | noun | bear |
| முதுகு | mudhugu | noun | back |
| அம்மா | ammaa | noun | mother |
| உடனே | udanay | adverb | immediately |
| வேண்டாம் | vayndaam | expression | no; do not |
| சிரிப்பு | sirippu | noun | laughter; smile |
Continue your language learning journey with these related lessons:
Source: மானின் சிரிப்பு. Story by Sanjiv Jaiswal “Sanjay”; Tamil translation by Idhaya Swaruba Princy (© Idhaya Swaruba Princy, 2019), from Smile Please!, based on his Hindi story वह हँस दिया, published by Pratham Books on StoryWeaver. CC BY 4.0. Tamil text retained; new English translation, learning notes and original illustration by LangFastPro. Source illustrations are not reproduced.




